பக்தர்கள் காரில் தவறவிட்ட நகை, பணத்தை 40 நிமிடங்களில் மீட்ட ஆந்திர போலீசார்

திருப்பதியில் காரில் தவறவிட்ட 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை 40 நிமிடங்களில் மீட்ட ஆந்திர போலீசார், பக்தர்களிடம் ஒப்படைத்தனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியம், தனது குடும்பத்தினருடன் திருமலை எக்ஸ்பிரஸ் ரயிலில், திருப்பதி ரயில் நிலையம் சென்றார். அங்கிருந்து திருமலைக்கு மூன்று வாடகை கார்கள் மூலம் சென்றுள்ளனர்.

அப்போது தாங்கள் கொண்டு வந்த நகை, பணம் வைத்திருந்த 3 பைகள் காணாமல் போனதைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து 2-வது நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், காரில் பக்தர்கள் தவற விட்டு சென்ற பைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படத்தனர்.

புகார் அளித்த 40 நிமிடத்திற்குள் துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்ட போலீசாருக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version