ஆந்திராவில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், ஐதராபாத்தில் இயங்கி வந்த ஆந்திர அரசு அலுவலகங்கள் காலி செய்யப்பட்டு தெலங்கானா அரசிடம் ஒப்படைக்கப்பட்டன
2014ம் ஆண்டு ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. ஐதராபாத் தெலங்கானாவின் தலைநகராக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டதால், ஆந்திராவின் தலைநகராக அமராவதி அமைக்கப்பட்டு வருகிறது. 16 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் தலைநகராக இருக்கும் என்று வரையறை செய்யப்பட்டதால், ஆந்திர அரசின் கட்டிடங்கள் ஐதராபாத்தில் இயங்கி வந்தன. தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பதவியேற்றுள்ள நிலையில், ஐதராபாத்தில் இயங்கி வந்த ஆந்திர அரசு அலுவலகங்கள் காலி செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை இருமாநிலங்களுக்கான ஆளுநர் நரசிம்மன் வெளியிட்டுள்ளார்.