உலகின் பல்வேறு இடங்களிலும் திராவிடர்கள் இருந்துள்ளதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் டோமின் செமினஸ் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்வெட்டுகளை மானுடவியல் ஆய்வாளர் டோமின் செமினஸ் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடல் ஆதிக்கத்தில் பழந்தமிழர்களே முன்னோடியாக இருந்ததற்கான ஆதாரங்கள் வலுவாக கிடைத்திருப்பதாக தெரிவித்தார். திராவிடர்கள், தமிழர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அனைவரும் தென்னிந்தியாவிற்கு மட்டுமே சொந்தமானவர்கள் என்பது தவறானது என்றும், அவர்கள் உலகம் முழுவதும் பரவி இருந்துள்ளதாகவும் டோமின் செமினஸ் கூறினார்.