தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தில், முதுமக்கள் தாழிகள் மற்றும் பழங்கால பொருட்கள், குவியல் குவியலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை போன்ற பகுதிகளில், மாநில அரசு அகழாய்வு செய்து பல்வேறு பொருள்களை கண்டு பிடித்து, தமிழர்களின் தொன்மையை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
தற்போது கொரோனா ஊரடங்கினால் பணி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வசவப்பபுரத்தில், 100 ஏக்கர் பரபரப்பளவில், பரம்பு ஒன்று பரந்து விரிந்து காணப்படுகிறது.
இந்த பரம்பு பகுதியில், ஏராளமான முதுமக்கள் தாழிகளும், பழங்கால பானை ஓடுகளும் காணப்படுகின்றன.
இந்த தாழிக்குள் ஜாடிகள் உள்பட மண்பாண்டங்களால் செய்யப்பட்ட பொருட்கள் காணப்படுகின்றன.
மேலும், இரும்பு ஆயுதங்கள், விளக்கு தூபம் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்துள்ளன.
இந்த இடத்தில், தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிககை விடுத்துள்ளனர்.