தர்மபுரி தொகுதி வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் பெயர் அறிவிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில், அதிமுக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தர்மபுரி மக்களவை தொகுதி வேட்பாளராக, அன்புமணி ராமதாஸ் பெயரை, பாமக அறிவித்தது.
இதை தொடர்ந்து, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையம் அருகே, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளான, பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும்,தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதில் அதிமுகவைச் சேர்ந்த தொமு நாகராசன், நகர செயலாளர் சங்கர், ஒன்றிய செயலாளர் கோபால், பாமக மாநில துணைத்தலைவர் பாடி செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.