தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30-திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே உள்ள சின்னப்பன் கொட்டாய்யை அடுத்தள்ள பொப்படி கிராமத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட பெண்கள் வழக்கம் போல் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே வால்பாறை கிராம புறங்களில் உள்ள தோட்டங்களில் கூலி வேலைக்கு சாமந்தி பூக்கள் பறித்து கொடுக்கும் வேலை செய்து விட்டு, வழக்கம்போல் 6 மணிக்கு மேல் டாட்டா ஏசி ( மினி லாரி)யில் வீடு திரும்பும்போது. அ.மல்லாபுரம் அருகே கடத்திக்கொள்மேடு என்ற இடத்தில் ஓட்டுனா் குமாா்(25) கட்டுப்பாட்டை இழந்தார்.
மினி லாரி நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த 26க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயத்துடன் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில் பலத்தகாயமடைந்த பொப்படி கிராமத்தை சோ்ந்த மாதையன் மனைவி நாகரத்தினம்(25), 6மாத கர்ப்பிணி இவர் உட்பட சிலா் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
பலத்தகாயமடைந்து பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.