அமமுகவின் தங்கத்தமிழ்ச் செல்வன் பிரசாரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம், பாலமேட்டில் தேனி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை வரவேற்க ஆரத்தி தட்டுடன் நின்று கொண்டிருந்த பெண்களிடம் தேர்தல் விதி முறைகளை மீறி அமமுகவினர் பரிசு பெட்டியை காண்பித்து பணப்படுவாடாவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..