மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடல்நலக் குறைவால் இன்று மறைந்தார் – அவரது வாழ்க்கை பின்னணி குறித்து தெரிந்துகொள்ளலாம்

பாஜகவின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான அனந்தகுமார் உடல்நலக் குறைவால் இன்று மறைந்தார். அவரது வாழ்க்கை பின்னணி குறித்து பார்க்கலாம்…

பாஜகவின் தேசிய தலைவர்களில் ஒருவரான அனந்தகுமார் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர். 1996ஆம் ஆண்டு முதல் தெற்கு பெங்களூரு தொகுதியில் இருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தொடர்ந்து 6 முறைகள் தேர்வான சிறப்புக்கு உரியவர். 1999ல் வாய்பாய் தலைமையிலான அமைச்சரவையில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த இவர், 2004ஆம் ஆண்டில் பாஜகவின் தேசிய செயலராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தபோது, மத்திய அமைச்சரவையில் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக அனந்த குமார் பொறுப்பேற்றார். 2016 ஆம் ஆண்டு ஜூலை முதல் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகப் பணியாற்றி வந்தார். சில மாதங்கள் முன்புதான் இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அமெரிக்காவிலும் பெங்களூருவிலும் கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், இன்று தனது 59ஆம் வயதில் மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைந்தார். இவரது மறைவு அரசியல் வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது

 

Exit mobile version