ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் சிற்றோடைகள் நீரின்றி காணப்படுகின்றன.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ளது ஆலைமலை புலிகள் காப்பகம். இங்கு காட்டு யானை, அரிய வகை குரங்கு போன்றவை உள்ளன. ஒரு மாதத்துக்கு முன்பு பச்சை பசேலென இயற்கை சூழ்ந்த பகுதியாக காணப்பட்ட டாப் ஸ்லிப், ஆழியார் மற்றும் வால்பாறை வனப்பகுதி வறட்சி காரணமாக, தற்போது மரங்கள் காய்ந்து இலைகள் உதிர்ந்து எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள ஓடைகள், தடுப்பணைகள் மற்றும் குளங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுவதால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி வனத்தை விட்டு வெளியேறி வருகிறது. இதனிடையே வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் நீரை நிரம்பும்பணி நடைபெற்று வருகிறது.