நாடு முழுவதும் வாக்காளர்கள் சரிபார்ப்பு திட்டத்தை செப்டம்பர் மாதம் 1ந் தேதி முதல் 30ந் தேதி வரை மேற்கொள்ள இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த சரிபார்ப்பு திட்டத்தில், வாக்காளர்கள் தங்களது புகைப்படம், முகவரி மாற்றம், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்குபதிவு மையங்களை கூடுதலாக உருவாக்கவும், பூத் சிலிப்பு வழங்கும் பணிகளை மேம்படுத்தவும் முடியும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. Voter Help line, NVSP service portal மற்றும் இ-சேவை மூலம் சரிபார்ப்பு பணிகளை வாக்காளர்கள் மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், சரிபார்ப்பு திட்டத்தில் வாக்காளர்களின் செல்போன் எண் மற்றும் இமெயில் முகவரி பெறப்படும் எனவும் தெரிவித்துள்ளது.