திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தென்மாவட்டங்களை இணைக்கக்கூடிய முக்கிய நகராக உள்ளது. விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு திருமங்கலம் வழியாகவே பயணிகள் செல்கின்றனர்.
இதன்காரணமாக, திருமங்கலத்தில் கடும் கடும் போக்குவரத்து நெரிசலில் ஏற்படுவதால், அங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொது மக்கள் நிதி திட்டத்தின் கீழ் கட்டப் படுவதாக இருந்ததாகவும், ஒப்பந்தம் எடுக்க யாரும் முன் வரவில்லை எனவும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, அண்மையில், சட்டசபையில் பொது மக்கள் நிதி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டு ஒப்பந்தம் எடுக்காத திருமங்கலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு பொது நிதியில் கட்டடங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், புதிய பேருந்து நிலையம் எப்போது கட்டப்படுமோ என பொதுமக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.