மின் கணக்கீட்டாளர் இல்லாமல் மின் பயனீட்டு அளவு கணக்கிடும் கருவி

மின் கணக்கீட்டாளர் இல்லாமல் மின் பயனீட்டு அளவு கணக்கிடு செய்யும் புதிய கருவியை வடிவமைத்து கும்பகோணம் பொறியியல் கல்வி மாணவிகள் அசத்தியுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் சென்று மின் பயனீட்டு அளவு கணக்கிட முடியாத நிலையில் மின்வாரிய ஊழியர்கள் உள்ளனர். இதனால், கடந்த மாதங்களில் செலுத்திய அதே மின் தொகையை மீண்டும் கட்ட வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் கொரானா பாதித்த பகுதிகளில் மின் கணக்கீட்டாளர் வீடு வீடாக செல்லாமல் ஒவ்வொரு வீடுகளிலும் எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அதற்கான கட்டணம் விவரம் போன்றவை அனைத்தும் மின் நுகர்வோரின் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக வரும் புதிய கருவியை கும்பகோணம் தனியார் பொறியியல் கல்லூரி மாணவிகள் வடிவமைத்துள்ளனர்.

இந்தக் கருவியின் மூலம் உரிய காலத்தில் பணம் கட்டாத பயனீட்டாளரின் மின் இணைப்பை துண்டிக்கலாம் என்றும், துண்டிக்கப்பட்ட இணைப்பை மீண்டும் வழங்கலாம் என மாணவிகள் தெரிவித்தனர்.

Exit mobile version