மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நீர்வரத்து வினாடிக்கு 65ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு18 ஆயிரம் கனஅடியிலிருந்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117 புள்ளி ஐந்து ஒன்பது அடியாகவும், நீர் இருப்பு 89 புள்ளி ஆறு டி.எம்.சியாகவும் உள்ளது.

Exit mobile version