கருக்கலைப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு?

கருக்கலைப்புக்கான கால அவகாசத்தை மத்திய அரசு 24 வாரமாக நீட்டிக்க உள்ளது.. இதற்கான காரணம் என்ன என்பதை அலசுகிறது இந்த தொகுப்பு..

தற்போது நடைமுறையில் உள்ள கருக்கலைப்பு சட்டத்தின் படி 20 வாரத்திற்கு உட்பட்ட கருவை மட்டுமே கலைக்க முடியும். ஆனால், கருவில் உள்ள குழந்தையின் உடல்வளர்சி,மனவளர்ச்சி குறைபாடுகள் குறித்து 20 வாரங்களுக்கு பின்னரே தெரிந்துகொள்ள முடியும்.

20 வாரங்களைக் கடந்த பின்னரே குறைபாடு கண்டறியப்படுவதால், கருக்கலைப்புக்காக பலர் அப்போது தான் மருத்துவமனையை நாடுகிறார்கள்..
ஆனால் 20 வாரங்களை தாண்டிவிடுவதால், கருவை கலைக்க சட்டம் அனுமதிப்பதில்லை.. இதனால் பலர் நீதிமன்றத்தை நாடிவருகிறார்கள்..

இதுமட்டுமல்லாது, பாலியல் வன்முறைகளுக்கு ஆளான சிறுமிகளும், பெண்களும் தங்கள் கருவை கலைக்க முடியாத நிலையில் நீதிமன்றத்தை நாடுகின்றனர்.

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்துவந்த நிலையில், மத்திய அரசின் வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். கருக்கலைப்புகான கால அவகாசத்தை 24 வாரமாக நீட்டிப்பது தொடர்ப்பான சட்ட திருத்தங்கள், சட்ட அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் இந்த விவகாரத்தில் நேர்மறையான முடிவையே மத்திய அரசு எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது…

காரணம் என்ன?

தற்போது நடைமுறையில் உள்ள கருக்கலைப்பு சட்டத்தின் படி 20 வாரத்திற்கு உட்பட்ட கருவை மட்டுமே கலைக்க முடியும்

கருவில் உள்ள குழந்தையின் உடல்வளர்சி,மனவளர்ச்சி குறைபாடுகள் குறித்து 20 வாரங்களுக்கு பின்னரே தெரிந்துகொள்ள முடியும்

20 வாரங்களைக் கடந்த பின்னரே பலர் மருத்துவமனையை நாடுகிறார்கள்

20 வாரங்களை தாண்டிவிடுவதால், கருவை கலைக்க சட்டம் அனுமதிப்பதில்லை

பாலியல் வன்முறைகளுக்கு ஆளான சிறுமிகளும், பெண்களும் கருவை கலைக்க முடியாத நிலை

கருக்கலைப்புகான கால அவகாசத்தை 24 வாரமாக நீட்டிப்பது தொடர்ப்பான சட்ட திருத்தங்கள், சட்ட அமைச்சகத்திடம் நிலுவை

விரைவில் முடிவெடுக்கப்படும் – மத்திய அரசு

இந்த விவகாரத்தில் நேர்மறையான முடிவையே மத்திய அரசு எடுக்கும் என தகவல்

Exit mobile version