மன்னார்குடி அருகே பட்டாசு கிடங்கில் நாட்டு வெடி வெடித்த விபத்தில் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மன்னை நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கு இயங்கி வருகிறது. இதில், ஏராளமான தொழிலாளர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கோயில் திருவிழாவுக்காக நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திடீரென நாட்டு வெடி வெடித்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் தொழிலாளர்கள் அறிவு, மோகன், சேட்டு, பாபு, சிங்காரவேலு ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.