நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அதிவேகமாக வந்த கார், அருகில் உள்ள வீட்டின் மேல் விழுந்ததில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
சேரம்பாடியில் இருந்து கூடலூரை நோக்கி சோமன் என்பவர் தனது காரை அதிவேகமாக இயக்கி வந்துள்ளார். அப்போது கோழிப்பாலம் என்ற பகுதியில் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த வீட்டின் மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் வீடு சேதமடைந்த நிலையில், வீட்டில் இருந்த குஞ்சுமுகமது என்ற முதியவர் காயமடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி மக்கள் காரிலிருந்து தப்பி ஒடிய சோமனை துரத்திப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த குஞ்சுமுகமதுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து கூடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சேகரன் தலைமையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். செல்போனில் பேசியபடி கார் ஓட்டியதால், விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.