உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று சாதனை படைத்த பி.வி. சிந்துவை கடத்தி வந்து, திருமணம் முடிப்பேன் என்று 70 வயது முதியவர் ஒருவர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமையன்று குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை வசதி,குடிநீர் வசதி,மின் விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவும், வேலைவாய்ப்பு போன்ற உதவிகளைச் செய்து தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பார்கள்.
மாவட்ட ஆட்சியரும் அந்த மனுவை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க கூறுவார். ஆனால் குறைதீர் கூட்டத்தில் ஒரு வித்தியாசமான மனு கொடுக்கப்பட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அப்படி என்ன அந்த மனுவில் இருந்தது?
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அருகே உள்ள விரதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயது முதியவர் மலைச்சாமி. இவர், தான் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி பிறந்ததாகவும் நாட்டில் உள்ள தீமைகளை அழித்து குற்றச் செயல்களைத் தடுத்து மக்களுக்கு நன்மை செய்வதற்காக உருவத்தை மாற்றிக்கொண்டு முதியவர் அவதாரம் எடுத்துள்ள தாகவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.
மேலும் தனக்கு தற்போது 16 வயது தான் ஆவதாக பெரிய குண்டை தூக்கி போட்டது மட்டும் இல்லாமல் தன்னுடைய அழகுக்கு ஏற்ற பெண் என்றால்,அது, விளையாட்டு வீராங்கனை பிவி சிந்து மட்டும்தான் ,எனவே அவரை தூக்கி வந்து திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அதற்கு மாவட்ட ஆட்சியர் உதவி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியுள்ளார்.இந்த மனுவை பெற்றுக்கொண்டு படித்த பார்த்த மாவட்ட ஆட்சியர் என்ன சொல்வதென்று தெரியாமல், திகைத்து நின்றார். மேலும் இதை கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் இது காமெடியா சீரியஸா என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.