தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22ஆம் தேதி, பொதுமக்கள் நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, ஆலைக்கு சீல் வைத்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியிலான பணிகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரம் -உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: உச்சநீதிமன்றம்தமிழக அரசு மேல்முறையீடுஸ்டெர்லைட்
Related Content
இனி ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் கொடுக்க முடியாது... ஏன்?
By
Web Team
August 1, 2021
ஸ்டெர்லைட் விவகாரம் - 28 ஆண்டுகள் என்ன நடந்தது?
By
Web Team
April 26, 2021
ஆலையைத் திறப்பது நோக்கமல்ல: ஸ்டெர்லைட் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் கருத்து
By
Web Team
April 26, 2021
வட்டிக்கு வட்டி ரத்து: உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
By
Web Team
October 14, 2020
ஹத்ராஸ்: பெண்ணின் உடல் இரவோடு இரவாக எரிக்கப்பட்டது ஏன்? - உ.பி.அரசு விளக்கம்
By
Web Team
October 6, 2020