யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பெற விபரீத முயற்சி

யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை பெற, தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர், இருசக்கர வாகனம் வைத்து வீடியோ எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் செல்லூர் மண்டலத்தைச் சேர்ந்த ராமி ரெட்டி என்ற இளைஞர் யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில் நான்கு சக்கர வாகனத்தின் கீழ் சிறிய வகை பொம்மைகளை வைத்து உடைப்பது போன்ற பல்வேறு வீடியோக்கள் எடுத்து யூடியூப்பில் பதிவு செய்து வந்துள்ளார். ஆனால் அதற்கு பார்வையாளர்களிடையே வரவேற்பு இல்லாத காரணத்தால் அதிக பார்வையாளர்களை பெற்று யூடியூபில் பெருமளவு பணம் ஈட்ட திட்டமிட்டுள்ளார். அதன்படி, ரயில் வருகைக்கு முன்பு தண்டவாளத்தில் எரிவாயு சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனங்கள் பட்டாசுகள் ஆகியவற்றை வைத்து ஆபத்துக்களை விளைவிக்கும் வகையில் வீடியோ பதிவு செய்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து ராமி ரெட்டியை கைது செய்த போலீசார், யூடியூப் சேனலில் பதிவேற்றி இருந்த வீடியோக்களை நீக்கினர்.

Exit mobile version