அமமுக மாவட்டச் செயலாளர் குல சண்முகநாதன் அதிமுகவில் இணைந்தார்

அமமுகவை சேர்ந்த புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் குல சண்முகநாதன் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு இன்று காலை வந்த குல சண்முகநாதன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அமமுகவில் இருந்து விலகி அதிமுவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய தலைவர் வைரமுத்து, புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி முன்னாள் தலைவர் சொக்கலிங்கம், கரம்பக்குடி, தட்டாவூரணி பாலகிருஷ்ணன் மற்றும் கட்சித்தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Exit mobile version