ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இருசக்கர வாகன ஊர்வலம் சென்ற அமமுகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அமமுக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பிரச்சாரத்திற்கு செல்லும் பகுதிகளில் எல்லாம் அமமுகவினர் தொடர்ச்சியாக விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதுகுளத்தூர் பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்ற போது அமமுகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறிய இந்த செயலை காவல்துறையினர் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பிரச்சாரம் நடைபெற்ற இடங்களில் விதிகளை மீறி தோரணம் கட்டிய அமமுகவினர் தேர்தல் அதிகாரிகள் சொல்லியும் அவிழ்க்க மறுத்தனர். இதையடுத்து தேர்தல் அதிகாரிகளே தோரணத்தை அகற்றினர்.