எந்தவித முன் அறிவிப்புயின்றி அமமுக வேட்பாளர் சார்பாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதால் புகார் அளிக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதிட்பட்ட அமமுக வேட்பாளராக ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனந்தன் தலைமையில் இந்த தொகுதிக்கு வருவதற்கு முறையான எந்த அனுமதி பெறாமலும், கட்சி அலுவலகம் திறந்துள்ளனர். மேலும் சுமார் 30 க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து போக்குவரத்து இடையூறு செய்ததால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் புகார் அளிக்கும்பட்சத்தில் அமமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல் அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.