விழுப்புரத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சாலையில் ஊர்வலமாக சென்ற அமமுகவினர் ஆம்புலன்ஸ்க்கு கூட வழிவிடாமல் சென்றதால் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகினர். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் கணபதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி, விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் ஊர்வலமாக சென்றனர். ஆட்டோவில் சென்ற சிலர் குடிபோதையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி அச்சுறுத்தல் விடுத்தனர்.