அமமுக ஒரு கட்சியே கிடையாது அங்கிருந்து யார் சென்றால் என்ன? அமைச்சர் தங்கமணி கேள்வி

அமமுக என்று ஒரு கட்சியே கிடையாது என்றும், அங்கிருந்து செந்தில் பாலாஜி சென்றால் என்ன? வேறு யார்தான் சென்றால் என்ன? என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றார். செந்தில் பாலாஜி குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அமமுக ஒரு கட்சியே கிடையாது என்றும், அங்கிருந்து செந்தில் பாலாஜி சென்றால் என்ன? வேறு யார்தான் சென்றால் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version