நாய்க்கு வேலையுமில்ல..நிக்க நேரமுமில்லன்னு கிராமங்கள்ல ஒரு பழமொழி சொல்வாங்க கேள்விப்பட்ருக்கீங்களா.. கடந்த மார்ச் 10 ம் தேதி தேர்தல் தேதி அறிவிச்ச நாள்ல இருந்து இந்த பழமொழிக்கு பொருத்தமாவே எல்லா வேலையும் பாத்த ஒரு ஆள் தமிழக அரசியல்ல இருக்காருன்னா…சாரி மக்களே… இருந்தார் அப்டின்னா அது டிடிவி தான்.
பணம் கொடுத்தே ஜெயிச்சுடலாம் ங்குறது எல்லா இடத்துலயும் நடக்காதுன்னு டிடிவிக்கு பலமுறை பலர் சொல்லியும் புரியாததால் இப்போது புரியும்படி பதில் சொல்லி இருக்கிறார்கள் மக்கள். போட்டியிட்ட பல தொகுதிகள்ல பாவம் டெபாசிட் கூட வாங்க முடியாததை நினச்சாதான் நமக்கே பரிதாபமா இருக்கு.
இதுல போற இடத்துல எல்லாம் நாங்கதான் அதிமுக , நாங்கதான் அதிமுக ன்னு குடுகுடுப்பை ஆட்டி ,ஆயிரம் வித்தைகாட்டி, கூடாத குறைக்கு ஏடாகூடமா காசெல்லாம் கொட்டி, தேர்தலை சந்திச்ச இந்த சிங்கப்பூர்க்காரருக்கு, ரிசல்ட் வந்ததுக்கு அப்பறம்தான் இது மல்லாக்க படுத்து மார்மேல எச்சி துப்புற வேலைனு புரிஞ்சது..
ஆமா .. மக்கள் கடைசி வரைக்கும் டிடிவி யை காமெடியாதான் பாத்துருக்காங்க.. இது எதுவுமே புரியாம எல்லாத்தையும் சீரியசா எடுத்துகிட்டு படத்துல வர்ர பவர்ஸ்டார் மாதிரி வாழ்ந்து தொலச்சிருக்கார் . இந்த காமெடியை நடத்திமுடிக்கத்தான் இவ்வளவு ஆட்டமும்… கொஞ்சமா நஞ்சமா…. எவ்வளவு ஆட்டம்.
சிங்கப்பூர்ல இருந்து வந்த கையோட திரும்பிபோற நினப்ப தொலச்சிட்டு, யாரோ யாரையோ தலைவான்னு சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டு நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் வடிவேலு ஸ்டைலில் வான்டடாக வந்து தலைவன்னு சொல்லிச் சிக்கிக்கொண்டார்.
எட்டனா இருந்தா எட்டூரு எம்பாட்டை பாடும்னு தப்பா நினைச்சு ஆர் கே நகர்ல கொஞ்சம் சத்தமா பாடி தேர்தல் ஆணையத்திடம் கையும் களவுமாக பிடிபட்டு, எலக்ஷன நிப்பாட்டி அரசாங்கப் பணத்தை வீணடிச்சார். கையில் காசு இருந்தால் எல்லாம் நடக்கும் என்று நினைத்ததற்கு சரியான சவுக்கடி வாங்கினார். ஆனால் அப்படி வாங்கியும் திருந்தவில்லை என்பதுதான் திரைக்கதையில் ட்விஸ்டே…
அடுத்த முறை ரொம்ப அறிவாளித்தனமா பணம் கொடுப்பதாக நினைத்து 20 ரூபாய் டோக்கன் கொடுத்து அதிலும் அறைகுறையாக மாட்டிக்கொண்டார். வென்றிருந்தாலும் கூட அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர்தான் மீம் மெட்டீரியல். குக்கருக்குள்ள கொஞ்சமா போட்ட அரிசி சோறாகும் போது அதிகமா தெரிவது போல, இவர் போட்ட 20 ம் நூறாகும்னு நினச்சுக்குங்கன்னு இவர்கள் செய்த காமெடிதான் அந்த தேர்தல் களத்தின் மேன் ஆஃப் த மேட்ச்.
மக்களும் “இலவச எண்டர்டெய்ன்மெண்ட்டுக்கு ஒரு பீஸ்” என்று நினைத்து இந்த 20 ரூபாய் குக்கர் வியாபாரியை கண்டுகொள்ளாமல் விட நடமாடும் காமெடி சேனலாக அமமுக என்றொரு கட்சியை துவக்கினார். சரி கட்சி தொடங்கிட்ட? என்னப்பா சின்னம்னு கேட்டா… இரட்டை இலையை மீட்கத்தான் கட்சின்னு சொன்னார். சரி..மீட்பீங்க ? எப்படி ? … தேர்தலில் போட்டி போட்டுத்தான் என்றால் என்ன சின்னத்துல நிப்பீங்கன்னு கேட்டா அதற்கும் பதிலில்லை. கட்சினு இருந்தா சின்னம்னு ஒன்னு இருக்கனும் …தெரியுமா தெரியாதான்னு கேட்டதற்கு அதுக்குதான் நாங்க பதிவே பண்ணலியே…ன்னு பாவமாக முகத்தை வைத்துக்கொண்டார்களே தவிர இதற்கும் பதிலில்லை. சரி அரசியல்னா என்னன்னு கேட்டா கடைசியில் அதற்கும் பதிலில்லை. நமக்கும் இவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆனா அமமுக , அமமுகனு ஊரெல்லாம் தலைக்கு 10 ரூவான்னு கூட்டம் கூட்டி தம்பட்டம். இதுல 2019 மக்களவை தேர்தல் அறிவிச்சதும் ஓட்டுகேட்க கிளம்பியாச்சு.. என்ன சின்னத்துக்கு ஓட்டு கேட்பீங்க மிஸ்டர்.தினகரன்னு கேட்டா அமமுகவின் வெற்றி சின்னமாம்……சின்னம்மா ஆசி பெற்ற சின்னமாம்னு சொல்ல முடிஞ்சதே தவிர சின்னம் என்னனு சொல்லவே முடியல…
பொது சின்னம் தரமுடியாது அது பதிவு பெற்ற கட்சிகே உண்டான தகுதி. ஒவ்வொரு சுயேட்சைக்கும் ஒவ்வொரு சின்னம்தான் தர முடியும்னு தேர்தல் ஆணையம் சொல்ல.. ஐயயோ..ஏற்கனவே நான் தான் அதிமுக வாரிசுன்னு சொன்னா ஒருத்தனும் நம்ப மாட்றான் ..இதுல இதுவேறயா ..சரி சரி நா பதிவு பண்ணிடறேன்னு ஓட்டமா ஓடிப்போய் கட்சிய பதிவு பண்ணினார்.. இப்போதான் ரெண்டாவது ட்விஸ்ட்..
அதுவரைக்கும் சின்னம்மா கண்ணம்மான்னு திரிஞ்ச கூட்டம், பொதுச்செயலாளராக டிடிவியை வைத்துக்கொண்டு பதிவு செய்தது. அதாவது அமமுக வுக்கும் அந்த சின்னம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம். மொத்தத்துல சின்னமும் இல்ல, அந்த So called சின்னம்மாவும் இல்ல.. அமமுக இனி ஒரு அமைப்பே இல்லை..
இதெல்லாம் புரிஞ்சுக்க அமமுக வுக்கு தான் ரொம்ப நாளாச்சு.மக்களுக்கு எப்போவோ புரிஞ்சுடுச்சு.. அதான் தேர்தல் ல இவங்களுக்கும் சேத்தே புரியவெச்சுட்டாங்க.. இதுல தேவையே இல்லாம தினகரன நம்பி பதவியும் போய் மரியாதையும் போய் உள்ளதும் போச்செ நொல்லகண்ணா ன்னு உள்ளுக்குள்ள அழுதுகிட்டெ இருக்காங்க அந்த பாவப்பட்ட 18 பேரும்னு தகவல்..
இரட்டை இலை வேணும்…தொப்பி வேணும்..குக்கர் வேணும்…பரிசுப்பெட்டி வேணும்…னு மாறி மாறி அமமுக காமெடி செய்யட்டும்.. எந்த சின்னத்தில் நின்னாலும் எங்களுக்கு அமமுக வேணாம்னு மக்கள் தெளிவா இருந்திருக்காங்க என்பதுதான் இந்த தேர்தல் முடிவுகள் சொல்லும் தெளிவான செய்தி.
அதிமுக அதன் போக்கில் வெற்றிநடை போட்டுகொண்டே இருக்கிறது. திமுக எப்போதும்போல தில்லாலங்கடி வேலைகளை செய்துகொண்டே இருக்கிறது. அமமுக தான் இனி கட்சியை கலைத்துவிட்டு காசி ராமேஸ்வரம் போக வேண்டும் என்பதுதான் கிளைமாக்ஸ்.