குமாரபாளையத்தில் அமமுக பிரசார கூட்டத்திற்கு பணம் கொடுப்பதாக கூறி அழைத்து வரப்பட்ட மக்களுக்கு பணம் தராததால் சலசலப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அமமுக சார்பில் பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் பணம் கொடுப்பதாக கூறி அழைத்து வரப்பட்டனர். அவர்களில் சிலருக்கு மட்டும் பணம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு பணம் கொடுக்காததால் சலசலப்பு ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் தினகரனின் வாகனத்தை மடக்கி முறையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்ட பொதுமக்கள் அமமுக கட்சியின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.