இணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுக மாவட்ட செயலாளர்கள்

அமமுக-வை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளர் பொன்.ராஜா, சென்னை மத்திய மாவட்ட அமமுக செயலாளர் சந்தான கிருஷ்ணன், வடசென்னை மத்திய மாவட்ட அமமுக செயலாளர் லட்சுமி நாராயணன் ஆகிய 3 பேரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

 

Exit mobile version