அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றும் ஊழியர்களை, தேவைப்பட்டால் கொரோனா தடுப்பு பணிகளில் பயன்படுத்திக் கொள்ள பொது சுகாதார இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களை மாவட்டங்களில் இயங்கும் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகளில் பணியாற்றும் மினி கிளினிக் மருத்துவர்கள், செவிலியர்கள் தவிர, மற்ற பகுதிகளில் இயங்கும் மினி கிளினிக்குகளை தடுப்பூசி முகாமாகவும் பயன்படுத்தலாம் என்றும்,
நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் பயன்படுத்தி கொள்ள அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.