ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்காவில் குழந்தைகள் குதூகலமாக விளையாடி மகிழ்கின்றனர்.
குருவரெட்டியூர் குக்கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் விளையாடி மகிழ 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்டூர் செல்ல வேண்டிய நிலை இருந்தது. விடுமுறை நாட்களில் குழந்தைகள் விளையாடி மகிழ, இப்பகுதியில் ஒரு பூங்கா அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று அரசு சார்பில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அம்மா சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் விடுமுறை நாட்களில் குழந்தைகள் பலர் விளையாடி மகிழ்ந்தனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அரசிற்கு அக்கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.