தங்களது கருத்துக்கள் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுவது குறித்து காங்கிரஸ் வெக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
தாத்ரா மாநிலம் சில்வாசா பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி கூறும் கருத்துக்களை பாகிஸ்தான் போற்றுவதாகவும், ஐ.நா.வில் பாகிஸ்தான் அளித்த மனுவிலும் கூட ராகுல் காந்தியின் அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம் பயங்கரவாத சவப்பெட்டிக்கு கடைசி ஆணி அடிக்கப்பட்டதாக அமித் ஷா கூறினார்.