அதிகாரத்திற்காகவே எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர்வதாக அமித்ஷா குற்றச்சாட்டு

மக்கள் நலனுக்காக இல்லாமல், ஆட்சி அதிகாரத்திற்காகவே எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர்வதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றச்சாட்டி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து விவாதிப்பதற்காக பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று துவங்கியது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற இந்தக் இரண்டு நாள் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். நேற்றைய கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக நிகழ்ச்சியை துவக்கி வைத்த அமித்ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் விவேகானந்தரின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின் யுக்தி மற்றும் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version