ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் பதற்றம் குறித்து அமித் ஷா ஆலோசனை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக 10 ஆயிரம் வீரர்களை மத்திய அரசு அனுப்பியது. அந்த மாநிலத்தில் தங்கியிருக்கும் அமர்நாத் யாத்ரிகர்களும், சுற்றுலாப் பயணிகளும் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version