பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால், அமெரிக்கர்கள் அந்நாட்டிற்கு செல்ல வேண்டாம் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதுகுறித்து அதிபர் டிரம்பில் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டு விமான போக்குவரத்துத்துறை அறிக்கை வெளியிட்டு அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் பாகிஸ்தான் செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக பலுசிஸ்தான், கைபர் பக்துங்வா மாகாணங்களுக்கு செல்வதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.