பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி அமெரிக்க நிறுவனங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன. கூகுள் நிறுவனம் 12,000 பேர்களை ஜனவரி 20aம் தேதியில் பணியில் இருந்து நீக்கியது. மேற்கொண்டு மைக்ரோசாப்ட் 10,000 பேர்களை வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்தது. அமேசான் நிறுவனம் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. இதனைத் தொடர்ந்து ஐபிஎம் போன்ற ஐடி கம்பெனிகள் 3.900 பேர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த பணி நீக்கமானது குடும்பத்தில் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வேதனையைத் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களே இந்த பணிநீக்க நடவடிக்கையினை அதிரடியாக மேற்கொள்வதால் பல ஆயிரகணக்கானோர் வேலையிழந்து உள்ளனர். இது மிகவும் வேதனையான சம்பவமாக கருதப்படுகிறது.