தும்மும் போதும், இருமும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரையில், எம்ஐடியின் இணை பேராசிரியரும், திரவ இயக்கவியலில் நிபுணருமான லிடியா பவுரவுபியா, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற சுகாதாரத்துறையினர் அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அணியும் முகமூடியின் செயல்திறனை பொறுத்து, அவர்கள் தும்மும் போதும், இரும்பும் போது வெளியாகும் நீர்த்துளிகள்33 முதல் 100 அடி வரை பரவ வாய்ப்பு உள்ளதாகவும், சுமார் 23 முதல் 27 அடி ((7-8 மீ)) வரை பரவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாயிலிருந்து வெளிப்படும் உமிழ்நீர் அந்த பகுதியின் ஈரப்பதமான மற்றும் சூடான வளிமண்டலம் காரணமாக, தனிமைப்படுத்தப்பட்ட நீர்த்துளிகளை நீண்ட காலத்திற்கு ஆவியாதலை தவிர்க்க உதவுவதாகவும், இத்தகைய சூழ்நிலையின் கீழ், ஒரு துளியின் ஆயுட்காலம் ஒரு நொடியிலிருந்து நிமிடங்கள் வரை நீடிக்கும் எனவும் லிடியா பவுரவுபியா ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமெரிக்காவை தளமாகக் கொண்ட தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபாசி, எம்ஐடியின் ஆய்வு எச்சரிக்கை மிகவும் தவறாக வழிநடத்தும் என்றும், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் மிகவும் வலுவான தும்மல் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.