அமெரிக்கா , ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்துக்கு நீதி கேட்டு பேரணி!!

நிறவெறியை கண்டித்து அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

அமெரிக்காவின் மின்னாபொலீஸ் நகரில் கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, 12வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாஷிங்டன், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் நிற வெறிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்துக்கு நீதி வழங்க கோரி பேரணியாக சென்றனர்.

நிறவெறிக்கு எதிரான போராட்டம் அமெரிக்காவில் மட்டுமில்லாமல் உலக நாடுகளிலும் தீவிரம் அடைந்துள்ளது. இங்கிலாந்தின் பிரிஸ்டன் நகரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எட்வேர்டு கால்ஸ்டனின் சிலையை உடைத்த போராட்டக்காரர்கள், அதை சாலையில் உருட்டிய படி ஆற்றில் தூக்கி வீசினர். 

Exit mobile version