அமெரிக்க அதிபரின் இந்திய வருகை குறித்து அந்நாட்டு அரசு விளக்கம்

பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தகம் தொடர்பாகப் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வரும் 24ம் தேதி இந்தியா வருகிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி அகமதாபாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், டிரம்ப்பின் இந்திய பயணத்தில் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் குறித்து அமெரிக்கா தீவிரமாக ஆராய்ந்ததாகவும், அதில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும், டிரம்ப்பின் இந்த சுற்றுப்பயணத்தின் போது, இதுகுறித்து பிரதமர் மோடியிடம் ஆலோசிக்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபரின் இந்த சுற்றுப்பயணத்தின் போது, சிறப்பு வாய்ந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு, குடியுரிமை சட்டத்தில் ஜனநாயக மரபுகளை நிலை நிறுத்த அமெரிக்கா வலியுறுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

Exit mobile version