அமெரிக்கா வேலை வேண்டாம் ..! தாய்நாட்டில் புதிய முயற்சியில் ஈடுபடும் இளைஞர்

அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர், தனது வேலையை வேண்டாமென உதறிதள்ளிவிட்டு தாய்நாட்டில் கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

குழந்தை வயிற்றில் இருக்கும் போதே அவர்களுக்கு தரமான  பள்ளி தேடும் நிலை உருவாகிவிட்டது.  சிறிய பொருள் வாங்க வேண்டும் என்றாலே இணையத்தை தேடி செல்லும் இந்த தலைமுறைக்காகவே, புதிய முயற்சியை இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

அருண் மீனா என்ற இளைஞர் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தார். அதனை வேண்டாம் என உதறிதள்ளிவிட்டு, இந்தியாவுக்கு திரும்பி உள்ளார். பின்னர், பள்ளிகளைத் தேடி அலையும் பெற்றோர்களுக்காக ‘ஸ்கூல்மைகிட்ஸ்’  என்ற இணையதளத்தை உருவாக்கி, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கி வருகிறார். ஸ்கூல்மைகிட்ஸ் இணையதளத்தில் நாடு முழுவதும் உள்ள மழலைப் பள்ளிகள் முதல் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் வரை அனைத்து விவரங்களைசேர்த்து வருவதாக அருண் மீனா தெரிவித்துள்ளார்.

 மேலும் இணையதளத்தை மாதம் 5 லட்சம் பேர் பார்வையிடுவதாகவும் அதனை 10-12 லட்சமாக உயர்த்த இலக்கு வைத்திருப்பதாகவும்  இளைஞர் கூறியுள்ளார். இந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள் மூலம் பெற்றோர் தங்களின் குழந்தைகளை சரியான பள்ளியில் சேர்க்க முடியும் என்று உறுதியாக அருண் மீனா தெரிவித்துள்ளார்.

Exit mobile version