15 ஆவது நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்புக்கு தேவையான நிதியை ஒதுக்குவது தொடர்பாகவும், முக்கிய பிரச்சினைகளை அணுகுவதற்கும் 15 வது நிதி ஆணையத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அந்த ஆணையம் உள்நாட்டு பாதுகாப்புக்கான தனி அமைப்பை நிறுவ வேண்டிய அவசியத்தையும், அதன் செயல்பாடுகளையும் ஆய்வு செய்யவும் இந்தத் திருத்தம் வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி 15 ஆவது நிதி ஆணைத்தில் திருத்தம் கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஓப்புதல் வழங்கியுள்ளது.திருத்தம் கொண்டு வர நவம்பர 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.