ஆம்புலன்ஸ் விபத்தில் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் காயம்

 

சென்னையில் ஆம்புலன்ஸ் விபத்தில் காயமுற்றவர்களை தமிழக அமைச்சர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை அடையாறு பேருந்து நிலையம் அருகில் இன்று அதிகாலை அரசு ஆம்புலன்ஸ் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர் மற்றும் மருத்துவ உதவியாளர் கோமதி ஆகிய இருவரும் காயமுற்றனர். அப்போது அவ்வழியாக வந்துகொண்டிருந்த சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடனடியாக அவர்களை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பிறகு, தற்போது இருவரும் நலமாக உள்ளனர். இதையடுத்து, மருத்துவமனைக்கு நேரடியாக சென்ற அமைச்சர்கள், அவர்களிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.

Exit mobile version