பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மரணம் அடைந்தார்

உடல்நலக்குறைவால் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் காலமானார். அவருக்கு வயது 66. இவர் 1972 முதல் 2012 வரை பல கன்னடத் திரைப்படங்களில் நடித்தார்.

கர்நாடக அரசின் திரைப்பட விருதும், நந்தி விருதும் பிற சிறப்பு விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார்.இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆவார். நாகரஹாவு, பங்காரத கள்ள, சீதையல்ல சாவித்ரி, மகதேஸ்வர பூஜாபல, சுபமங்களா போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான அம்பரீஷ். ப்ரியா படத்தில் ஸ்ரீதேவியின் காதலராக நடித்திருப்பார். திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவரை உடனடியாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

ஆனால் அம்பரீஷின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த போதிலும். உடல்நலக்குறைவால் நடிகர் அம்பரீஷ் இன்று மரணம் அடைந்தார். 

Exit mobile version