சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்ட அம்பேத்கர் உருவப்படத்துக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சமூக நீதி புரட்சியாளர், தீண்டாமை ஒழிய அரும்பாடுபட்டவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.பன்முகத்தன்மையாளர், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுத்தலைவர், பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கர் என முதலமைச்சர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையுமான அம்பேத்கரின் நினைவு நாளில், சமநீதி, சமத்துவம் தழைத்தோங்க பாடுபட்டவர் என்றும், அவரது நினைவு நாளில் ஏற்றத் தாழ்வுகளற்ற சமத்துவ சமூதாயத்தை உருவாக்கிட உறுதி கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.