அம்பதி ராயுடுவுக்கு வந்த சோதனை – இனி பந்துவீச முடியாது

இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீச, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடைவிதித்துள்ளது.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டரில் முக்கிய பேட்ஸ்மனாக வலம் வருபவர் அம்பதி ராயுடு. பகுதி நேர பந்து வீச்சாளரான இவர், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், பந்து வீசினார். அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் 14 நாட்களுக்குள் அம்பதி ராயுடு, தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தி திருத்திக் கொள்ள வேண்டும் என்று ஐசிசி கூறியிருந்தது.

ஆனால் இன்றுவரை அம்பதி ராயுடு தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. தற்போது, 14 நாட்கள் முடிந்துள்ள நிலையில், சர்வதேச போட்டிகளில் அம்பதி ராயுடு பந்து வீச ஐசிசி அதிரடியாக தடைவிதித்துள்ளது. அம்பதி ராயுடு சர்வதேச போட்டிகளில் இனி பந்து வீச முடியாது. ஆனால், பிசிசிஐ நடத்தும் உள்ளூர் போட்டிகளில் பந்து வீசலாம்.

Exit mobile version