வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல்!

ஆம்பன் புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர சூறாவளிப் புயலாக மாறும் என்றும், 20ம் தேதி மேற்குவங்கம் மற்றும் ஒடிசா அருகே நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல், வரும் 20ம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்தை ஒட்டிய கடற்பகுதியில், கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் 65லிருந்து 75 கிலோ மீட்டர் வரை இருக்கும் எனவும், இடை இடையே 85 கிலோ மீட்டர் வேகத்துக்கும் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்கே சுமார் 670 கிலோ மீட்டர் தொலைவிலும், புவனேஸ்வரிலிருந்து தெற்கே ஆயிரத்து 160 கிலோ மீட்டர் தூரத்திலும், கொல்கத்தாவிலிருந்து ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தெற்கு தென் மேற்கு திசையிலும் உள்ளது.  இது தற்போது வடக்கு வடமேற்கு திசையில் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் புயல் விலகிச் செல்வதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Exit mobile version