பொதுவெளியில் சமூக நீதி குறித்து அதிகம் வகுப்பு எடுக்கும் திமுக, தனது கட்சியின் பொறுப்பாளர்களை சாதி பார்த்து நியமித்தது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்த ஓர் சிறப்புத்தொகுப்பைக் காணலாம்.
கட்சியில் மூத்த உறுப்பினர்களை மதிக்காத திமுகவின் பண்பு, கட்சிப்பதவி தருவதில் சாதி அரசியல் செய்யும் திமுகவின் இரட்டைவேடம் ஆகியவை கோவை கழக உடன்பிறப்புகளிடம் இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. ஆம். கோவை மாநகராட்சியின் 47-வது வார்டு திமுக செயலாளர் லோகநாதனை, மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் அதிரடியாக நீக்கியுள்ளனர். இதற்கு சாதிதான் மிகப்பெரும் பின்புலமாக இருந்திருக்கிறது. இதனால் வெகுண்டு எழுந்த லோகநாதன், தனது 50-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் திமுகவின் வடகோவை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
இதனிடையே திமுகவில் மூத்த உறுப்பினர்களுக்கு, உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை எனவும், வாரிசு என்ற காரணத்திற்காக பெரிய பதவிகள் அவர்களைப் போய் சேருகிறது என்றும் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட லோகநாதனின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே கோவை வடக்கு மாவட்ட திமுக பதவிகள் அனைத்தும் மாவட்ட கழக செயலாளர் டி.ஆர்.ராமச்சந்திரனால் தொடர்ந்து பல லட்சங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக லோகநாதனின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சமூகநீதிக்கு ஆதரவாக பாடுபட்ட அண்ணாவால் வழிநடத்தப்பட்ட திமுக,அவர் காலத்திற்கு பின்னர் சாதியவாதிகள் மற்றும் வாரிசு அரசியல்வாதிகளின் கூடாரமாக மாறிப்போயுள்ளது என்பது தான் உண்மை.