பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடத்தை ஐதராபாத்தில் அமைந்துள்ளது. அதில் என்னென்ன வசதிகள் உள்ளது.
அதிகப்படியான மக்கள் தொகை காரணமாக இந்தியா மீது உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்த நிறுவனங்கள் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. ஆன்லைன் மார்க்கெட்டிங் உலகில் சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது.
2013-ல் இந்தியாவில் கால்பதித்த அமேசான் நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் 62 ஆயிரம் நிரந்தரப் பணியாளர்கள், ஒரு லட்சத்து 55 ஆயிரம் ஒப்பந்தப் பணியாளர்களும் உள்ளனர். இதில் உலகிலேயே தனது நிறுவனத்துக்கான மிகப்பெரிய அலுவலக கட்டிடத்தை இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள ஐ.டி மையத்தில் நானக்ரம்குடாவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் அமேசான் நிறுவன கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனம் இந்தியாவில் 5.5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதன் ஒருகட்டமாக இந்த மிகப்பெரிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே அமேசான் கட்டும் சொந்த கட்டிடம் இது.அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் உள்ள அமேசான் தலைமையகத்தில் கூட 5000 பேர்தான் வேலை பார்க்கக் முடியும்.இதில் மொத்தம் 15000 பணியாளர்கள் வேலை செய்ய முடியும்.1.8 மில்லியன் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடடத்தை கட்டி முடிக்க மூன்று வருடங்கள் ஆனதாக கூறப்படுகிறது. இந்த வளாகத்தில் தாய் மாருக்கான பிரத்யோக அறை ஒய்வு மற்றும் குளியலறைகள், பிராத்தனை கூடங்கள் என அணைத்து வசதியும் உள்ளது. இதை இன்னும் சில நாட்களில் விரிவுபடுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது