போர் நினைவுச் சின்னங்களுடன் ஐக்கியமான "அமர் ஜவான் ஜோதி"

டெல்லியில், தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் அமர் ஜவான் ஜோதி, ராணுவ முறைப்படி இடமாற்றம் செய்யப்பட்டது.முதல் உலகப்போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் நினைவாக, டெல்லியில் உள்ள இந்தியா கேட் அமைக்கப்பட்டது.

அதன் அருகே இந்தியா – பாகிஸ்தான் போரில் உயிரிழந்த 3 ஆயிரத்து 843 ராணுவ வீரர்களின் நினைவாக, அமர் ஜவான் ஜோதி ஏற்றப்பட்டது.

சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின்போது, அமர் ஜவான் ஜோதிக்கு அரசியல் தலைவர்கள் முதல் மரியாதை செலுத்தி வந்தனர். இந்த நிலையில், இந்தியா கேட் அருகில் புதிதாக கட்டப்பட்ட தேசிய போர் நினைவகத்தில், அமர் ஜவான் ஜோதி இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

புதிதாக கட்டப்பட்ட போர் நினைவகத்தில் அமர் ஜவான் ஜோதி முப்படைகளின் ராணுவ மரியாதையுடன் ஒன்றிணைக்கப்பட்டது. இந்திய படையினரின் கூட்டுத் தலைவரான சீப் மார்ஷல் பாலபத்ரா ராதா கிருஷ்ணா, அமர் ஜவான் ஜோதியை, போர் சின்னங்களுடன் ஏற்றி வைத்தார்.

நிகழ்வில், முப்படைகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். 50 ஆண்டுகள் இடைவிடாது எரிந்த அமர் ஜவான் ஜோதி, போர் நினைவுச் சின்னங்களுடன் இணைக்கப்பட்ட இடத்தில், ராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உள்ளிட்டோர், உயிர்நீத்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

Exit mobile version