அரசு பள்ளியை தத்தெடுத்து நடத்தி வரும் முன்னாள் மாணவர்கள்

தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியை தத்தெடுத்து தரம் உயர்த்தி நடத்தி வருகிறார் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு பள்ளியில் ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் பயின்று வந்த முன்னாள் மாணவர் சுப்பிரமணியம், அந்தப் பள்ளியை தத்தெடுத்து பல்வேறு பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக தனித்தனி கழிப்பிட வசதி, கலை அரங்கம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இப்பள்ளியில் உள்ள 30 வகுப்பறைகளில் கணினி மயமாக்கப்பட்ட தொடுதிரைகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்துத் தர மற்ற முன்னாள் மாணவர்களுடன் முயற்சி எடுத்து வருகிறார். இதனால் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Exit mobile version