நெல்லை மாவட்டம் வீரசிகாமணியில் தக்காளியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்துள்ள வீரசிகாமணியில் விவசாயிகள் அதிகமாக தக்காளி பயிரிட்டுள்ளனர். அதிகமான வெயிலின் தாக்கத்தால் தக்காளியின் விளைச்சல் குறைவாக காணப்பட்டது. இருந்த போதிலும் தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.
தக்காளியை வியாபாரிகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், சந்தைகளில் அதிக அளவு பொதுமக்கள் வாங்கி செல்வதால் லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.