உணவுடன் சேர்த்து ஆர்டர் செய்தவரையும் டெலிவரி செய்த zomato ஊழியர்

நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்ப வாகன வசதி இல்லாத இளைஞர் ஒருவர் zomato நிறுவனம் மூலம் வீடு திரும்பிய நிகழ்வு ஹைதராபாத்தில் நிகழ்ந்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த உபேஷ் என்ற என்ற இளைஞர் வேலை முடிந்து வீடு திரும்ப uber நிறுவனத்தை அணுகி உள்ளார். ஆனால் அதில் ரூபாய் 300 ஆகும் என காட்டியுள்ளது. மிகுந்த பசியில் இருந்த அந்த இளைஞருக்கு திடீரென யோசனை ஒன்று தோன்றியுள்ளது.உடனடியாக zomato செயலி மூலம் அருகில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தோசை ஆர்டர் செய்துள்ளார்.பின்னர் நேராக ஆர்டர் செய்த ஹோட்டலுக்கு சென்று அங்கு அவரது உணவை டெலிவரி செய்ய காத்திருந்த zomato ஊழியரிடம் தான் தான் அந்த உணவை ஆர்டர் செய்ததாகவும், என்னையும் உங்களுடன் கூட்டிச் செல்லுங்கள் என்று கூறி அவருடனேயே இலவசமாக வீட்டிற்கு பயணித்துள்ளார்.  அதற்கு ஈடாக தனக்கு 5 ஸ்டார் ரேட்டிங் அளிக்குமாறு ஊழியர் கூறியதாக உபேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அவரது புத்திசாலித்தனத்தை zomato நிறுவனம் உட்பட ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version